சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் -253

பிள்ளைக் கனி அமுதே

பிஞ்சுக் கைகள்
பிஞ்சுக் கால்கள்
பார்த்து
முத்தம் கொடுக்க
ஆசை

கட்டி அனைத்து
சுற்றி சுழன்று
சிரிக்க வைத்து
மகிழ்ந்திட ஆசை

கடவுள் ஏனோ
கோவம்
என்னை கண்ணீர்
சிந்திட வைத்திட்டாரே!

கார் இருள்
மேகம்
கண்களை மூட
காணாத தூரத்திலே
நீ. !!..

க.குமரன்
யேர்மனி