சந்தம் சிந்தும் சந்திப்பு
பிள்ளைக் கனி அமுது
—————
பெண் முழுமையடைவது
இல்லற வாழ்வில்
பிள்ளை யொன்று பெற்றாலே
அன்றேல் முழுமை அடைவதில்லை
ஆன்றோர் சொன்னது
இப்பேறு எல்லோருக்கும்
வாய்ப்பது இல்லை
வாய்த்தவர்கள் அதிஷ்டசாலிகள்
பிள்ளைகள் இல்லாதவர் படும்பாடோ
மனக்கவலை ஊரார் பேச்சு
அப்பப்பா எத்தனை வன்மை
இதையும் தாங்கி அவர்
விரதம் இருந்து ஊர்க்கோவிலெல்லாம் சென்று
வழிபட்டு
ஒரு பிள்ளையைப் பெற்றால்
போதுமா
பேணி வளர்க்க வேண்டுமே
இல்லற வாழ்வின் இனிமையே
அந்த பிள்ளைக் கனி அமுது அல்லவா
பிஞ்சு மழலையின் கொஞ்சு மொழியில்
தம் கவலை கஷ்டம் மறந்து
களிப்புறும் தருணமல்லவா
மழலையின் சொற்கேளாதவரே
குழனிது யாழினிது என்பராம்
பிள்ளைக் கனி அமுது
அது உயிரில் கலந்த ஒன்று
அதன் கோபம் சி்ரிப்பு அழுகை
அரைக் கணம் மட்டுமே
பின் எல்லாம் மறந்து
ஓடி வந்து கட்டி முத்தம் தந்தால்
வந்த கோபம் தானாய் பறந்து விடும்
சின்ன சின்ன வேலைகள்
சிரிப்பேட்டும் தன்மைகள்
பிள்ளைக் கனி அமுதின்
பேறல்லவா
நாமும் பெற்றோம் அதை
மற்றவரும் பெற வேண்டும்
பிள்ளைக் கனி அமுதை
மகிழ்வுடன் எல்லோரும் வாழலாமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
11.2.24