”பிள்ளை கனி அமுது”
பிள்ளைக்கனியமுது ஒன்று பிறந்திடவேண்டும்
அள்ளிக்கையால் எடுத்து அதைஅணைத்திட வேண்டும்
இல்லறத்தின் இலட்சியமாய் குழந்தை அமைந்திடவேண்டும்
குழந்தையும் தெய்வமும் ஒன்றெனக்கொள்ளவேண்டும்
மலடி என்று உலகம் பழிக்காமல் பெண்கள் தாயாகவேண்டும்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் மக்கட்செல்வம்
இதனைவிட வாழ்கையில் ஏது பேரின்பம்?
நன்மக்களைப்பெற்ற மகராசி,உலகு வழங்கும் உயர்பட்டம்
ஒரு தாய் சொல்லித்தெரிவதல்ல பிள்ளையின் அருமை
நாலு நல்லவர் வாழ்த்தினிலே விளங்கும் அவனது பெருமை
பிள்ளையொன்று பெற்றுவிட்டால் போதுமா?
பிறர்மெச்ச வளர்க்கவேண்டும் தெரியுமா?
எண்ணிக்கையின்றி பெறுவதில் இல்லை பெருமை
உத்தமனாய் ஒருபிள்ளை பெற்றாலே போதும்
நல்லவனாய் வளர்த்தால் உலகம் மெச்சுதல் சாலும்
இன்றைய குழந்தைகளே நாளைய உலகை தாங்குந்தூண்கள்
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்