13.02.2024
கவி இலக்கம் -134
பிள்ளைக் கனி அமுது
அள்ள அள்ளக் குறைவில்லாத
வெள்ளை உள்ளம் கொள்ளை
கொள்ளும் பிள்ளைக் கனி
அமுது நிறைவுப் பேரானந்தம்
அள்ளி அள்ளி அரவணைக்கத்
துள்ளித் துள்ளித் தாளமிடும்
கண்ணும் ,இமையும் இரு விழி
பேசும் மழலை மொழி ஆனந்தம்
வெள்ளிக் கைகள் வேவுகாட்டிட
பள்ளிக் கால்களோ போட்டியிட
இருந்தெழுந்து விழுந்தெழும்பிட
பல் இல்லாப் பொக்கை வாய்ச்
சிரிப்போ மிகையானந்தம் .