சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 137

“பிள்ளை கனி அமுது”

என் கைக்குள்
நீ வந்தபோது
தாய் என்கின்ற
புது உணர்வு
என்னுள் துளிர்த்தது!

எத்தனை துன்பம் வந்தாலும்
குழந்தை கனியின் சிரிப்பில்
உள்ளம் மகிழ்ந்திடும்

அர்த்தம் புரியாத
மொழி பேசி
தத்தி நடந்து விழுந்து அழுது
சிரிப்பில் அன்பை பொழிந்து

தாலாட்டில் மயங்கி தூங்கி
பிடிவாத குணம் கொண்டு
குறும்புகள்
பல செய்த
பிள்ளை கனி
அமுது
முக்கனிகள்
எக்கனிகள்

அன்பை பகிர
அறிவுரை பேச
ஆலோசனை பெற
பண்போடு பக்குவப்படும் பலம் தரும் பாலம் பிள்ளைக்கனி!
நன்றி
வணக்கம்