சந்தம் சிந்தும் கவிதை

க. குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 251

காதலர்

காத்திரு கண்மணியே
காத்திரு
காலம் எல்லாம்
எனக்கா காத்திரு

கடமைக்கும்
கடல் அலைக்கும்
ஓய்வில்லை !
கடந்து செல்வோம்
ஒரு முகமாகவே
அது வரை
காத்திரு!

அருந்ததியா
காத்திரு
அகலிகையாக
காத்திரு

இராமராக நான்
இருக்கும் வரை
நீயும் சீதையாக
செறிந்த பட்டணத்தில்
காத்திரு!…

வேளை வரும்
என காத்திரு
விடியும் நமக்கும்
எனக் காத்திரு ,,,,,,!

க.குமரன்
யேர்மனி