வணக்கம்
காதலர்
*********
கல்விக்கூடங்களில்
கைகூடும்
கடமை இடங்களில் கைகூடும்
தரிசன இடங்களில் கைகூடும்
காதல்…..
நவீனமயமாக்கலில்
சுவீகரிக்கும் இதயங்கள்
இடம்மாறி இணைந்திட
இணையமும் இடமளிக்க காதல் கசிந்து காதலராகிக்
கல்யாணமாகிக் குடும்ப
வாழ்வும் தேனாத்
தொடரும் பந்தத்தில்
காவியமாவார்கள் காதலர்கள்!
பெற்றோர் நிச்சயத்தில்
உற்ற துணையாக
சுற்றம் சூழ
மாசி ஒன்பதில்
மாலை மாற்ற
மணவறை அமர்ந்து
மன்றத்தில் சாட்சியாய்
மாங்கல்ய வரம் பெற்றுக்
காதலர்களானோம்
மூன்று பத்துடன் மூன்று
ஆண்டுகளாய் ..
காலங்கடந்தும் கசக்கவில்லைக் காதல்!
நன்றி