கவரிமான் விழிகள்
கவருதே எனையே!
கடந்து நீ! போனா
கலங்குவேன் தனியே!
தீட்டிய மையழகு
தீண்டுதென் நெஞ்சம்!
தீரா ஆசைகள்
தீருமோ கொஞ்சம்!
அந்தி மஞ்சள் வான
அசல் நிறந்தவளே! உனை
அடையவே விளைகிறேன்
அடியேன் நானே!
சென்னிறத்து செவ்விதழால்
சிவக்கணும் என் தேகம்!
செதுக்கிவைச்ச பல்லாலே
சிலிர்க்கணும் என் ரோமம்!
வாழ்வு முளுவதும்
வாழணுமே உன்னோடு!
வந்து சேர்ந்துவிடு
வாழ்வை தொடங்கிடுவோம்.
அடிக்கிற காத்தில
அலையுற சருகா
நா ஆனே புள்ள
உன்ன ஒரு தரம் பாத்தே
பதறுதென் மனசு
மறுமுறை பாத்தா
இயங்குமோ ஏ இதயம்?
துடிக்கிற இளமை
துரத்துதே உனையே
வெடிக்கிற அளவில
துடிக்குதே இதயம்
நொடி நொடி கணக்கா
நினைக்கிறேன் உனையே!
படிச்சது எல்லாம்
மறந்தே போச்சு
ஏ மனசில படிஞ்சது
உ நினைப்பேயாச்சு.
வடிச்ச சிலையா
வருடும் உன் அழகு
பிடிச்சே போச்சு
மடிச்சு வைச்ச
ஏ காதல் கடிதம்
நீ பிரிச்சு பாத்து
பிடிச்சு போனதாய்
கண் அடிச்சு காதலை சொல்ல
மூணு முடிச்ச போட்டு
உன்ன மணம் முடிச்சு
உ மடி சாய்ந்து
வாழணும் பல்லாண்டு.