சந்தம் சிந்தும் சந்திப்பு
காதலர்
——
காதல் வாழ்வின் இனிமை
கரைகாணா இளமை
துள்ளும் மனதின் ஏக்கம்
துரத்தும் மானின் வேகம்
கண்ணால் பேசும் கவிதை
காதல் மொழியின் பாஷை
மின்னல் போல மென்மை
மீண்டும் வேண்டும் நிலைமை
பசி இன்றி தாகம் இன்றி
காதலன் வரவை எண்ணி
காதலி துன்பத்திலிருக்க
தோழி அவளைத் தேற்றுவதை
அகநாநூறு சொல்லும்
இன்று காதலன் வரவை
கைத்தொலை பேசி சொல்லும்
சோகம் கலைக்கும்
அன்று காதல் நிலையானது
இன்று காதல் விலையாகுது
அந்தக் கால அம்பிகாபதி அமராவதி
லைலா மஜ்னு ரோமியோ யூலியட்
தேவதாஸ் பார்வதி எங்கே எங்கே
உண்மைக் காதல் அது
அழிவில்லாத்து
பொய்க் காதல் மெய்யில்
வேட்கை கொள்ளும்
காதலன் காதலி கருத்தொருமித்து
கலந்திதடும் காதல் சுகமானது
காதல் வாழ்க காதலர்கள் வாழ்க
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
5.2.24