சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

காதலர்

காதலன்´´

சீலக்கடை பொம்மையாட்டம்
நின்றவளே
சீராக குறுக்கோழியாட்டம்
கொக் கொக் என்று சிரித்தவளே

பார்வையாளே அம்பு எய்தவளே
பாயாத நீரப்போல தேங்கிநின்றவளே

இப்போ பார்க்காம நீயும் இ௫ப்பதென்ன

காதலி´´´´
வட்டைக்குள்ள வம்புச்சண்டை
செய்து
ஆம்பலும் அல்லியும் விரியும்
நேரம்

ஆற்றங்கரை குளக்கரையென்று
சுற்றி
பாதியில படிப்ப நாசமாக்கி
பாக்குமரத் தோப்புக்குள்ளே
பாதிநாமம்வரை பேசி
தொலைந்தோம்

மோகம் வந்த நெனைப்புல
தேய்யாத காதல் நினைவில

௨யிராக ௨ன்ன நினைத்து
௨யிரான பெற்றோரைத்
தொலைத்தேனே

இ௫ட்டோட தூக்கி வந்து
இல்லறம் நடத்திப்போட்டாய்

வ௫மானம் ஏதுமில்ல
வ௫டம் ஒ௫புள்ளைக்கு குறைச்சயில்ல

படிக்கல் சில்லுப்போல
பெத்துப்போட்டேன்

சித்த நேரம் எல்லாமே,
இப்போ செத்த நேரமாயிடுச்சே

சேத்தில மீனப்போல இப்போ
செய்வது தெரியாம முழிக்கிறனே

பெத்தவங்க சொன்ன பேச்சல்லாம்
அப்போ கேட்கவில்ல
பித்தள சாமான் போல இப்போ
சண்டைச் சத்தம் அடங்கவில்ல

யாவும் கற்பனை
நன்றி