06.02.24
ஆக்கம் -133
காதலர்
காலமெல்லாம் கடதாசியில்
காத்திருந்தது கண்ணிமைப்
பொழுது கைத் தொலைபேசி
பதிலில் உள்ளம் உவகையிடும்
இரவு பகல் போவது தெரியாமல்
இனம் புரியாத உணர்வில் மனம்
பூத்துக் குலுங்கி புத்தொளிர்வில்
காற்றில் பறப்பது போல் மிதந்திடும்
எல்லோருடனும் உரையாட வரும்
என்னவோ எல்லாம் சொல்லி உளறிட
மாலை எனை வாட்டுது மண நாளை
மனந் தேடுதெனக் காதலர் பாடிடுவார் .