சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

காதலர்

அன்பெனும் கூண்டில்
அவனியில் காதல்
அறியாது புரியாது
அனுதினமும் தேடல்

மலர்ந்திடும் காதல்
மகிழ்வாய் செல்லும்
துளிர்த்திடும் நேசம்
துணையாய் சேரும்

ஆதாம் ஏவால்
இல்லற காதலராய்
சாஜகான் மும்தாஜ்
கல்லறை காதலராய்

செல்வி நித்தியானந்தன்
.