மாசி…
சுழலும் பந்தாகி எமை சுமந்து நிற்கும் பூமித்தாய்க்கு நன்றி….ஆக்கிவைத்த கொடையாக கொடுத்த இயற்கையின் அழகோ அழகு…..
தைத்திங்கள் தந்த இன்பமும் துன்பமும் துவளாது காத்ததோ பெருமிதம்…
மண்ணிலோர் மகளாக தன்மடிசுமந்த தாய்…. என்னகம் ஆசையாக சுமக்கும் எனதன்பான அன்னையின் மலர்வுநாள் மாசி பதினாறு….இறைவனடியில் பதினொறாவதுஆண்டாகிட…தெய்வமாக நீங்கா கண்காணிப்போடு நிதம் தரும் துணையோடு எம் வாழ்வின் நகர்வு…
ஆண்டு மாற்றத்தில் இந்த மாசிக்குள் அகவை 98 …இன்னுமாக ஒருமுறை எப்போ …எங்கே காண்போம்….
மூத்தமகளான என் வருகைக்காக பன்னிரண்டு ஆண்டுகளாக வாசலில் காத்திருப்பதாக
தொலைபேசியில்
தன்னாவலை வார்த்தைக்குள்பொதிந்து வைத்து காத்திருந்த அத்தா (தந்தை)….
பங்குனியில் பயணச்சீட்டு போட்டுவிட்டதைஅறிந்து குதுகலித்தவிதம்காலனவன் கண்களுக்கு பொறுக்கவில்லையோ…
இறைவனுடைய தீர்பான விதிதானோ….
யாரறிவார்….
மாசியில் புரட்டிப்
போடமுடியா பதியமான எங்கள் தந்தையின்
2001 /மாசி / 18…
விம்மித்தேம்பும்
இதயக்கண்ணீருடன்….
திடீர் மாரடைப்பில்
இறைவனின் பாதாரவிந்தத்தில் மீளாத்துயில்….
இதுவாக மாசித்திங்கள்…
என்னகத்து இரண்டு தெய்வங்களின்
மாசியின் மாற்றிடா சரிதம்….
நன்றியுடன்
சர்வேஸ்வரி.க