சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாசி
———-
மாசிப் பனி. மூசிப்பெய்யும்
மாந்தர்களும் பேசித் திரிவர்
மேகமோ கறுத்திருக்கும்
மெல்லிய மழையும் தூறி நிற்கும்
மாசியில் வரும் மகாசிவரத்திரி
மக்களை நல்வழிப் படுத்தும்
சிவனுக்கு உகந்த மாதம்
புண்ணியம் சேர்க்கும் மாதம்
மந்த மாருத வரவை ப் பார்த்து
மகிழ்ச்சி காணும் மாதம்
மாசியில்தானே கார்ணவெல் கொண்டாடப்படும்
இங்கு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர்
கவலை துன்பம் மறந்து
உள்ளத்தில் உற்சாகமாக இருப்பர்
உள்ள பணத்தை செலவு செய்து விட்டு
அடுத்த மாதம் வெறுமை காணுவதும்
உண்டிங்கே
கவலை மறந்த மனிதர் இவர்கள்
தமிழர் அப்படியல்ல பணம் தேடுவதில்
தம் வாழ்வை இழப்பர்
மாசியில் மக்கள் மகிழ்வுடன் வாழட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
29.1.24