சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும்சந்திப்பு வாரம்-30.01.2024
மாசி
————-
மாசிப் பனி மூசிப் பெய்யும்
குளிரும் நடுக்கம் ஒன்றாய் வரும்
கோணிச் சாக்கும் தலையை மூடும்
விடியலில் இருள் மூட்டமும் இருக்கும்
கோயில் விசேடங்கள் நடக்கும்
மாசி மாதம் மகத்தான மாதம்
மாசி மகளாக நான் பிறந்த மாதம்
குழந்தையாக பிறந்த எனக்கு வீடு மகிழ்வான மாதம்
ஜெயா நடேசன் ஜேர்மனி