சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 251
30.01.2024 செவ்வாய்
“மாசி”
———
தைமகளுக் கிளை யவளே!
தலைமகளுக் கடுத் தவளே!
பொய் மழைக் குரியவளே!
போக மெலாம் தருபவளே!

நகுலமலை தருமோர் விழா,
நமக்கு அதுவோர் பெருவிழா,
அகிலமே அனுட்டிக்கு மிவ்விழா,
அதுசிவ ராத்திரித் தனிவிழா!

மாசி மகத்தின் மகத்துவம்,
மாமாங்க தீர்த்த உற்சவம்,
காசி முதல்வர் தரிசனம்,
காணக் கிடையா தனுதினம்!

மாசி மாதக் குளிரமைப்பு,
மாறுபட்ட ஓர் விறைப்பு,
ஊசி குத்தும் ஓருணர்வு,
உறக்கம் நீண்டிட மிகவிருப்பு!

நாசியும் மூக்கும் அடைக்கும்,
ஙஞண நமனவும் ஒலிக்கும்,
மூசிமூசியே அடிக்கடி தும்மும்,
மூக்கும் தொண்டையும் நோகும்!

நன்றி
மதிமகன்