விண்ணோக்கிச் சென்ற ஆண்டோ பன்னிரென்டு
பாதியிலே உன்வாழ்வு போனதேனோ,
நோயற்ற உனக்கு வந்த மாயமேது
உன்பிரிவை ஏற்க மனம் மறுக்குதே,மகளே நீ மீண்டும் வர மாட்டாயென்று
நாமும் தேடி ஒடுங்கியே போனோமே,
வாழ்ந்திடும் காலம் எல்லாம் உனைநினைந்து
ஒளி முகத்தைக் காணாது தேடுகின்றோம்,பெரும் துயரைத்
தானமாய்த் தந்தவளே
வழிந்தோடும் கண்ணீைரை யார் துடைப்பார்,
இவ்வுலகில் நாமும் வாழும் வரை
எம் இதயத்தில் பொறித்த சின்னமம்மா.அம்மா றாஜினி அல்போன்ஸ்பாடல் வரி : றாஜினி அல்போன்ஸ் &
குரல் ஒலி : மயிலையூர் இந்திரன் அவர்கள்..!
- 24/01/2024
- குடும்பம்
அழகாக வடிவமைத்த அருண் அவர்களுக்கும் நன்றி.
திரு.திருமதி நடாமோகன் வாணி அவர்களுக்கும்,
எம் நினைவில் பகிர்ந்து கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இறைபதம் எய்திய மகளார் ஜெசிகா அவர்களின் ஆன்ம ஈடேற்றம்
பெற ஆண்டவரிடம் மன்றாடுவோம்.நித்திய இளைப்பாற்றி அளித்தருளும் ஆண்டவரே.ராஜினி அல்போன்ஸ் உறவுகளுக்கு ஆழ்ந்த
அனுதாபங்கள்
ஜெசிக்காவின் நினைவுடன் ஒன்றித்தபடி
ராஜினி அக்கா,
உங்களுடைய மகள் ஜெசிக்காவின் ஆத்மா சாந்தியடைய உங்களுடன் சேர்ந்து , நாங்களும் இந்த நினைவு நாளில் இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
ஜெசிக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்தித்து ராஜினி அல்போன்ஸ் குடும்பத்திற்கும்
இறைதுணை நிற்பாராக
ஜெசிக்காவின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்.🙏
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம்சாந்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மலரும் பருவ மொட்டு
உலர்ந்தது யார் கண் பட்டு
பலதில் சிறந்த திறமை
பயனை பறித்த விதியை
நியதி இதுவெனல் முறையோ
நின்மதி தாய்மை பெறுமோ
நிதமும் நினைவில் வாழ்வாய்
நிலவில் உலவும் ஒளியாய்!!!
ப.வை.ஜெயபாலன்
உங்கள் துயரில் நாமும் இணைகின்றோம், ஆத்மா அமைதியும் சமாதானமும் உண்டாகட்டும்
ஜெசிக்காவின் ஆத்மா நித்திய இளைப்பாற ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
றாஜினி அல்போன்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
கொடுக்க இறைவனை
மன்றாடுகிறோம்.
எமது அன்புச்செல்வம் ஜெசிக்கா அவர்களின் 12வது நினைவு ஆண்டாகிய இன்றையநாளில் செல்வத்தை இழந்து பரிதவித்து போயிருக்கும் அன்பு தங்கை திருமதி.ராஜினி அல்போன்ஸ்
குடும்பத்தினருக்கு எமது துயர் பகிர்வினை தெரிவித்து அவரின்
ஆன்மா நித்திய இளைப்பாற்றியை அடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
துயரில் இணைந்து பிரார்த்திக்கும்,
சகோதரன்,
டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
இறைபதம் எய்திய ஜெசிக்கா அல்போன்ஸ் அவர்களின் ஆன்ம ஈடேற்
றம் பெற இறை வேண்டுதல் செய்வோம்.ஆண்டவரே நித்திய இளைப்பாற்றி அளித்தருளும்
ஜெசிக்காவின் ஆத்மா இறைவன் பாதங்களில் என்றும் அமைதி கொள்ளும் , நாமும் பிராத்திப்போம்.🙏
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஜெசிக்காவின் ஆத்மா இறைவன் பாதங்களில் என்றும் அமைதி கொள்ளும் , நாமும் பிராத்திப்போம்.🙏
ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏.
ஜெசிக்கா வின் நினைவலைகளோடு நாமும் இணைந்து கொள்கிறோம்.
ஜெசிக்கா உங்கள் நினைவுடன் எல்லோரும் ்்்்்
ஓம் சாந்தி. ஜெசிக்கா ஆத்மா சாந்தியடைந்திருக்கும். நினைவுகள் தொடர்கின்றன. ஆறுதல் அடையுங்கள் பெற்றோர்களே….