🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-24
23-01-2024
பொங்கலோ பொங்கல்
பானையில பாலை ஊற்றி
பச்சரிசி, சக்கரையிட்டு
பொங்கலோ பொங்கலென
பொங்கல் பொங்கி வர
தீமையும் வெறுப்பும் எரியட்டும்
நன்மையும், நட்பும் வளரட்டும்
இனிக்கின்ற கரும்பு போல
இதயங்கள் மாறட்டும்
தித்திக்கும் பொங்கல்
எத்திக்கும் பரவட்டும்
கதிரவனைக் கண்ட பனி போல
துயரங்கள் உருகட்டும்
தமிழர் மனங்களெல்லாம்
மகிழ்ச்சியில் திளைக்கட்டும்
விவசாயம் விளையட்டும்
வீண்பேச்சு விலகட்டும்
விவசாயி வந்திங்கு
கோட் சூட்டும் போடட்டும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.