சந்தம் சிந்தும் சந்திப்பு
பொங்கலோ பொங்கல்
—————
பொங்கலோ பொங்கல்
புதுப்பானையில் புத்தரிசி
பயறுடன் சர்க்கரை ஏலமக்காய்
முந்திரிப்பருப்பு திராட்சைப்பழம்
கமகம் வாசனையுடன் நெய்
தித்திக்கும் இனிய பொங்கல்
புதுப்புது சிந்தனைகள்
புதிய புதிய யுக்திகள்
பதிய வைக்கும் வழிகள்
மனதில் நற்பண்புகள்
நடைமுறையில் தெரிய வைப்பது
நல்லுறவு நல்லடக்கம்
நல்வாழ்வின் ஆரோக்கியம்
பொங்கும் பாலில் பொசுங்கும்
அழுக்கும் பொறாமையும்
வெந்த பின் ஏற்படும்
பொங்கலின் இனிமைபோல்
மனங்களும் இனிக்கட்டும்
தங்குதடையின்றி தரணியில்
தைமகளின் வருகை
சிறப்படையட்டும்
தைமகள் வந்தாலே உழவர் ஏழைகள்
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி தானே
கதிரவனுக்கு நன்றி கூறும் நாள்
உழவர் தாம் பட்ட துன்பம்
தீரும் நாள்
பொங்கல் பானையில்
பொங்கி வழியும்
பொங்கல் போல்
மக்கள் மனதிலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி