சந்தம் சிந்தம் சந்திப்பு வாரம்-16.01.2024. இலக்கம்-249
பொங்கலோ
பொங்கல்
——————-
தை பிறந்தால் வழி பிறக்கும்
கூடவே தைப் பொங்கலும் பிறக்கும்
விவசாய இல்லங்கள் உற்சாகம் பிறக்கும்
தமிழர் உள்ளங்களில் மகிழ்வு நிறையும்
பொங்கலோ பொங்கல்
பிறந்தது என உழவர்
குடும்பங்கள் கொண்டாடி மகிழ்வர்
வயலில் புது நெல் வெட்டி கதவில் தொங்க விடுவர்
நெல் குத்தி அரிசியாக்கி
புதுப்பானை வைத்து
கரும்பு தோரணங்கள் கட்டி வைப்பர்
முக் கல் வைத்து மண் பானை வைத்து
பச்சையரிசி பயறு சக்கரை என்பன போட்டு கொள்வர்
கூடி நின்று பொங்கல் வைத்து கும்பிடுவர
பொங்கலோ பொங்கல் என பொங்கி மகிழ்வர்
அயலவர்களுடன் உண்டு மகிழ்ந்து கழிப்பர்
தினம் தினம் துன்பப்படும் உழவர்கள்
மகிழ்ந்து கிடக்கும் திருநாளே இந் நாளாகும்
உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கிட மக்களும் மகிழ்வர்
பட்டிப்பொங்கலும் மாடுகளுக்கும் பொங்கி மகிழ்ந்து கொண்டாடுவர்
ஜெயா நடேசன் ஜேர்மனி