சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி-க

பொங்கலோ பொங்கல்….

விதைத்த வயலதில் வேளாண்மையி ல் செழிக்க ….
தன்னொளி வீச்சாக பகலவன் பகிர்வு….
மண்ணுயிர் பசிதீர்க்க மாநிலத்தில் உள்ளீடு…வெளியீடு…
ஆக்கிவைத்திட தன்னலமற்ற ஆளுமைக் கதிரவன்…
கிழக்குத்திசையதில் உதித்த பொழுதின் அழகோ அழகு….
வருணன் கொடையது மண்ணின் பசுமை….
ஊட்டிக்கொடுக்கும் உடலுக்கதுவே
ஊனகற்றும் உறுதி….
சூரிய சந்திர சூக்குமங்களே சுழலும் பூமியில் ஆட்சி….
அகன்று செல்லும் பாதைக்கு ஆக்கமாக சூரிய வெளிச்சம்….
எல்லாமானதின் நன்றிக்கடன் நாநிலத்தில் தமிழ்மொழியாளரின் பகிர்வு…. தைத்திங்கள்
தமிழ்மாத முதலாம் நாள் விடியலானது….
தாரணி செழித்து நீக்கிய பசிக்காக
முற்றத்துப் பொங்கல் நன்றி விலல் முறையானது…
சாணிகொண்டு மெழுகிய முற்றத்தில் கோலத்தில் அன்னையின் கைவண்ணம்…
பூரணகும்பத்தின்
ஒழுங்குமுறை கவனிப்போடு அத்தா( அப்பா)….
புற்று மண்ணில் பிடித்த அடுப்பினில் மாவிலை இஞ்சிதழை சுற்றிக்கட்டி விபூதி சந்தன பூச்சினால் அலங்கரித்த மண்பானை ஏற்றி ….
பரம்பரையாக வளர்த்தவழி வந்த எங்கள் செல்லம் “சந்தனம் “பசுவின் பாலுடன் நீர்கலந்து …
தென்னம்பாளையை அக்கினிக்கு
அர்பணிப்பதில் தங்கைகள் ஆர்வம்….பட்டாசு வெடிக்க வைத்து மகிழ்ந்திருக அண்ணை தம்பிகளின் ஆர்வம்….
கிழக்குத் திசையில் பால்பொங்கிட வைத்திட அத்தாஅன்னை எடுக்கும் எத்தனம்…..அத்தனையும் நினைவினில் விரிய அன்று அந்த முற்றத்து
அழகான தருணம்…
உறவுகளுக்கு ஓடிஓடி பகிர்ந்து சுவைத்த பொங்கலின் இனிமை….
பொங்கலுடன் அத்தா விரும்பிக்
கேட்டு அம்மியில்
அரைத்து சுவைக்கும் இஞ்சிச் சம்பல்….
வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கமழும் சாம்பிராணிபுகை,மல்லிகைப்பூ வாசம், செம்பருத்திப் பூவின்கீழ் சாணியில் அத்தா
பிடித்த பிள்ளையார் அழகு…..
மார்கழித்திங்களிலிருந்து முன்பின் முற்றத்தில் பொங்கல்வரை எறும்புகளுக்கு உணவாக அரிசிமாக்கோலம் போட்டு நடுவில் பிடித்து
வைத்த 31பிள்ளையார்களை மாலையில் குளத்தில்போட
தம்பிமார்களின் தோள் சுமக்கும் பல்லக்கு ஆய்த்தம் செய்தவேளை….
மகிழ்ந்த அந்நாளை..
இந்நாள் சுமக்க மனச்சுமையை விழிகளில் கண்ணீர் சுரப்பினும்….
நாவில் சுரக்கும் இனிமையோடு
“பொங்கலோ பொங்கல் ” தை பிறந்தால் வழிபிறக்கும்…நம்பிக்கையோடு
நகர்வோம்…. தும்பிக்கையான் துணை எல்லோருக்கும் எல்லாமான சந்தோஷங்களை அள்ளித்தந்திடட்டும்…..
நன்றியுடன்
சர்வேஸ்வரி.க

இத்தனையும் எடுத்துச்
சொல்ல வைத்து
சந்தம் சிந்திட கவிகோர்க்க வைக்கும் பாவை
ஜெயபாலன் அவர்களுக்கு நன்றி.

..

.