சந்தம் சிந்தும் சந்திப்பு 249
“பொங்கலோ பொங்கல்”
ஊரெல்லாம் வெடிச்சத்தம்
ஒருவாரம் முன்பே
ஒலிக்க தொடங்கும்.
வீட்டு நாய் வெருண்டோடும்
உண்ணவும் வராது
சந்தை பொங்கல்
சாமானால் கலகலக்கும்.
அப்பா குழி வெட்டி பழுக்க போட
அண்ணை மூன்று நாள்
புகை ஊத ,
இடைப்பழம் பழுத்தபடி
வெட்டி குழிக்குள் போட்ட வாழைக்குலை
மஞ்சலாய் பழுத்து
பொங்கலன்று வெளிப்படும்
வீடெல்லாம் பனை ஓலை கட்டி தூசு தட்டி
நாற்சார் வீட்டு அறைகள் விறாந்தை எல்லாம்
நீர் ஊற்றி விளக்குமாறால்
கழுவப்படும்
சங்கக்கடையில் கூப்பனுக்கு தந்த பங்கீடு போதாது என்று
சீனியர் கடையிலும்
சக்கரை கசுக்கொட்டை
முந்திரி பருப்பு வாங்கி வருவார் அப்பா
பெரிய மண்பானை சட்டிகள்
பால் றொட்டி,சீனி அரியதுர பணியாரம் இரா இராவாய் சுடுபடும்
எச்சில் படுத்தாமல் படைக்க என்று
சொட்டும் வாய்பாக்கும் எமக்கு கிடையாது.சாணம்,கோல மா,மாவிலை,தோரணம்
நடு முத்தத்தில் அலங்கார பந்தல்.
சீனவெடி,பூறிஸ் என்று கொளுத்தி விளையாடி
சாமம் படுக்க போய்
அதிகாலை எழுந்து
தோய்ந்து
பூதக் கட்டாடி வெளுத்துக ர கொண்டுவந்த உடுப்பை உடுத்து
பொங்கலோ பொங்கல் என்று பொங்கி
மூன்று தலை வாழை இலையில் படைத்து
குடும்பமாக சூரியனை கும்பிட்ட காலம்
கனவு போல
குடும்பம் அக்கம் பக்கம்
சுற்றம் நாட்டுக்கு நாடு பரந்து
பொல்லாத போராலே எல்லாம் இழந்தோம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-
குடும்பமாக சூ