வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 250
தலைப்பு – பொங்கலோ பொங்கல்
தையும் வந்தது நம்பிக்கையும் கூடியது
கைகள் இணைந்தன வாழ்க்கையும் சுகமானது
வைகறை விடியல்கள் வாட்டத்தைப் போக்கியது
பைங்கிளியின் பேச்சு பட்டாம்பூச்சியின் வண்ணம்.
பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் மனங்கள்
மங்களங்கள் நிறையட்டும் மாற்றங்கள் தொடரட்டும்
திங்களவன் வரவு திசையெல்லாம் பரவட்டும்
எங்கும் அமைதி ஏமாற்றங்கள் குறையட்டும்
பொங்கல் சுவைபோல் பொலிவுகள் நிறையட்டும்
கரும்புபோல் இனிப்பு நீரிழிவுகளை அடக்கட்டும்
இரும்புப்பெட்டி பணங்கள் வறுமையை ஒழிக்கட்டும்
திருத்தட்டும் அதிகாரங்கள் புதிய வருடத்தில்.
நன்றி வணக்கம்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/01/2024