பொங்கலோ பொங்கல்
வானம் கறுத்தது வான்மழை பொழிந்தது
தானம் சிறக்கவே தந்தாள் நிலமாதா
பொன்னும் மணியுமென பொலிந்தது சிறந்தே
நன்றென ஆதவனும் நவின்றான் ஒளிதனை
மனமும் மகிழ மாதம் மும்மாரி
தினமும் வாழ்வு தித்திப்பாய் இனிக்க
குடும்பம் சிறக்க குவலயம் மகிழ
படும் துன்பம் பறந்து போகும்
தைபிறந்தால் வழிபிறக்கும் தரணியெங்கும் ஒளிமிளிரும்
கைநிறையப் பணமும் கவலையெல்லாம் மறந்துபோகும்
உறவுகள் கூடும் ஒன்றாய் ருசிக்கும்
சிறுவர்கள் கூடி சிட்டாய்ச் விளையாடுவர்
கரும்பும் இஞ்சியும் கற்கண்டும் தேனும்
விரும்பி உண்ண விருப்புடன் பொங்கி
பாலும் பொங்க பொங்கலோ பொங்கல்
என்னு எழுப்பும் குரல்கள் இனிமையே