சந்த கவி வாரம் 134
பொங்கலோ பொங்கல்
உழவர் திருநாள்
உன்னத பெருநாள்
ஊர் கூடி உறவு கூடி
மகிழ்ந்திடும் பொங்கல்
சாணத்தால் மெழுகி
முற்றத்தில் கோலமிட்டு
விளக்கேற்றி
கும்பிடுவாள் அன்னை
பால் எடுத்து பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா
பொங்கல் பானை பொங்கி ஊத்துவது போல்
மனங்களில்
மகிழ்ச்சி பொங்கிட பொங்கி
படைத்திடுவோம்
உழைக்கும் மக்கள்
இயற்கையை தெய்வமாக
கருதப்படும் சூரியனுக்கும்
கால்நடைகளுக்கும் நன்றி பகரும்
உன்னத நாள்
கால்நடைகளுக்கு குளிப்பாட்டி பொட்டு வைத்து மாலை அணிவித்து
பொங்கிடும்
பொங்கல்
பட்டிப் பொங்கல்
நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும்
திருநாள் !!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்