பொங்கலோ பொங்கல்
விளைந்தபயிர் கதிரிலே
விடியற்காலை முற்றத்திலே
வண்ணகோல வாசலிலே
வனப்பான பொங்கல்
மாவிலை தென்னை
தோரணங்கள் கட்டியே
புதியபானை புத்தரிசி
புதுமையான பொங்கல்
முக்கனிகள் படைத்து
முடிவுவரை இருந்து
பட்டாடை பட்டாசு
பந்தம்கூடி பொங்கல்
பொன்விளைந்த பூமியிலே
பொன்போன்ற கதிரவனும்
உணவழித்த உழவனாம்
உண்மைநன்றி சொல்லியே
தித்திப்பாய் பொங்கிடுவோம்