வசந்தத்தில் ஒரு நாள்…
மண்ணில்அன்னை மடிப்பரிசமே வசந்தம்….
வாழ்க்கையை
நுகரவைத்து தினம் அன்னையின்
தரும் முத்தமும்
வசந்தம்… அன்னையின் புன்னகை வதனமும் தினம்
தந்த வசந்தம்…
இயற்கை தரும் வசந்தம் காலமுள்ளவரைபோலவே….
பெற்றவர் தந்த உடன்பிறப்புகள் தரும் வசந்தம்…
ஆக்கிவைத்த இறைவனுடைய
ஒவ்வொரு ஊற்றின் நுகர்வுமே வசந்தம்…
இயற்கையின் ஒவ்வொரு படைப்புமே வசந்தத்தின்
பொழிவே….
வசந்தத்தில் ஒருநாள் மட்டுமல்ல…
அகத்தின் உணர்வூற்று நல்லினிய லயிப்பாகும் போதெல்லாம்
வசந்தம் வீச்சாக
தொடரும் ஆனந்த கானமே…