[ வாரம் 248 ]
“வசந்தத்தில் ஓர் நாள்”
வருடமொருமுறை வந்துபோகும் பருவகாலம் வசந்தம்
மானுட வாழ்விலும் இளமைக்காலம் ஒரு வசந்தம்
இரண்டுமிணைந்தது வசந்தகாலக்கோலங்கள்
எதிர்கால வாழ்வையே உருவாக்கும் கோலங்கள்
பறவைகள் போல் சுதந்திரமாய் பறந்து திரிந்தகாலம்
எதற்கும் துணிந்த இன்பமானதொரு பொற்காலம்
மணம் வீசும் மலர்களின் வாசம் காவிவரும் தென்றல்
கருத்தொருமித்த உள்ளங்கள் வெளிப்படுத்தும் காதல்
நாளொருவண்ணமாய் வளர்ந்தகாதல் சோடைபோகுமா?
காதலை வளர்த்து கடிமணம்புரிய உதவும் பலர் இந்நாளில்
மோதலை வளர்த்து இணைதலைத்தடுக்கும் வீணர் சிலர் திரைமறைவில்
வசந்தத்தில் ஓர்நாள் தொடங்கிய காதல் கருகிப்போனால் இதயம்தாங்குமா?
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்