வசந்தத்தில் ஓர் நாள்
வசந்தத்தில் ஓர் நாள்
வாழ்திடவே!
வரமொன்று தாரீர்
வானுறையீர்!
மனமுடைந்து வாழும்
வாழ்வுதனை
என்றைக்கு மாற்றி
நீர்! நிறைவு தாரீர்.
குறையொன்றுமில்லை
என்றைக்குமே என்று
கூறும் காலம்
குன்றியே போகுதே.
ஏதோ ஒர் உறுத்தலுக்குள்
உறைந்து கிடக்கும்
எம் உணர்வுகளை உணர்ந்திட
எவர் மனமும் விரும்பலையே!
புத்தாண்டு பிறப்போடு
புகுத்திய வரிகளால்
வாழ்வாதார நெருக்கம்
உச்சாணிக் கொம்பில்!
தார்மீக பண்புகளின்
தடம்புரள்வுக்களால்
தட்டுத்தடுமாறும்
நாம் காத்துநின்ற அறம்!
பாடுபட்ட பலன்கள்
நிறைவேறத நீட்சி!
கண்முன்னே காணும்
கலாச்சார வீழ்ச்சி!
அன்று
காட்டுக்குள் வாழ்ந்தாலும்
கட்டுக்குள் நின்றோம்
இன்று மேய்பான் இல்லாத
மத்தைக்கூட்டங்களாய்
ஆனதே எம் பரிதாபம்.
கிடைக்காத ஒன்றாய்
வசந்ததும் ஆனதே!
கிடைத்தலும் கிடப்பில்
கிடந்ததும் இல்லையே!