சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சந்தம் சிந்தும் கவி..
பேரன்பின் கூடமிது
பிரியமான பாசமிது
அன்பாலே ஆளும்
அரவணைத்துப் பேசும்
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்த மாடம்
எண்மராய் நாங்கள் வாழ்ந்திருந்த கூடம்
பாசத்தின் பறவைகளாய்
பட்டாம் பூச்சிகளாய்
சுற்றி வந்த மனையே
சொந்தங்கள் கூடிடுமே
சொர்க்கமாய் மாறிடுமே
சின்னச் சின்ன சேட்டைகளில்
சிறகடித்து மகிழ்வோம்
முற்றமதில் விளையாட்டு
முழுநிலாவில் கூட்டாஞ் சோறு
கூட்டுறவின் பொற்காலம்
உடன்பிறப்புக்களின் வாழ்காலம்
வருமா இனிமேலும்
வசந்ததின் பிறந்த மனை
வற்றாத அன்பின் இணை!
நன்றி மிக்க நன்றி