சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.11.2023
கவி இலக்கம்-242
நீரழிவும் நீர் இழிவும்
——————
நீரழிவும் நீர் இழிவும் மனித பயணத்தில்
இடைஞ்சலும் இக்கட்டும் வந்து சேரும்
சலம் அடிக்கடி கழியும்
தேகம் மெலியும்
சாக்கடையில் நீர் தங்கும்
துர்நாற்றமும் டெங்கும் பரவும்
நீர் தாகம் எடுக்கும் அடிக்கடி பசியும் தூண்டும்
நோய்க்கு மாத்திரையும்
இன்சுலின் ஊசியும் தேடி வரும்
நீர் அதிகமாயின் வெள்ளப்பெருக்கும் பயிர்கள் அழிவும் ஓடி வரும்
நீரழிவு அதிகமாகும் புண்ணும் வலியும் பெருகும்
கால் விரல்கள் அகற்றவும் முடியும்
கட்டுப்பாடுடன் இருப்பின் சீவியமும் நீளும்
நீர் அதிகமாயின் மண் சரிவும் மக்கள் வெளியேறவும் சந்திக்க வரும்
ஜெயா நடேசன்