“மாவீரரே”
கார்த்திகை மலர்களே
கருகித்துடித்த மொட்டுகளே
போர்க்களப் புகழ்பாடி
புகைப்படத்தில் வந்தீரோ!
ஒளி விளக்கே – எங்கள்
உயர் திருவிளக்கே
எண்ணையிலே துளிக் கண்ணீர்
திரியிட்டு ஏற்ற வந்தோம்!
செங்குருதி கொதிக்குதப்பா
செங்காந்தள் மலர் காண்பதிலே
சங்க மறத்தமிழ் ஈழத்திற்கா…
மண்ணில் இந்த கொடுமையம்மா!
வீரச்சாவைத் தழுவிய
வீரத்தாய் பெற்றெடுத்த – எங்கள்
உடன் பிறப்புகளே!
உங்களுக்கான வீரவணக்கம் தந்தே
வீரத்தாலாட்டுப் பாட வந்தோம்!
எம் விடுதலைத் தியாகிகளே
வீரத்தமிழீழப் போராளிகளே – உம்மை
சடுதியில் மறவோமா – எம்
இனத்தின் சாதனை சிற்பிகளை!
இன்னுயிர் ஈந்தீர்களே
இதிகாச காவியத் மறவர்களே!
என்னுயிர் துச்சமென்றா
எண்ணி மாண்டீரோ!
சோதனைக் காலத்திலும்
வேதனை – எறிகணை பாய்ந்தோட
சாதனை புரிந்திட்ட
சரித்திர நாயகர்களே!
புனிதமாம் தாய்தேசம்
புண்ணிய பூமியை
பொக்கிசமாய்க் காத்த
புனிதர்களே!
நின்புகழ் வாழ்க வாழ்கவே!
நல்லுயிர் மண்ணில்
புதைக்கப்பட வில்லை!
நல்முத்தே விதைக்கப்பட
நெல் வித்தே நின்புகழ் வாழ்க!
அன்னைத் தமிழ் வாழ்க
எங்கள் தலைவர் பிரபாகரன் வாழ்க!
அபிராமி கவிதாசன்.
31.10.2023