மனிதம் வாழும்..!
மனிதன் பிறப்பு மனிதம்
விளங்கும்.
மான்புடன் என்றும் சிறந்து ஓங்கும்..
கடமையுணர்வு கண்ணியம் பெற்று.
காலத்தால் அவன் மனிதம் வாழும்.
சத்திய நெறியை சரித்திரமாய்க் கொண்டு
சுத்தமான நெஞ்சுடன் நிமிர்ந்து.
சாதனை படைக்கும் திறமையும் பூண்டு.
சாந்தகுணத்திலே மனிதம் வாழும்.
சொன்ன சொல்லை நிவர்த்தி செய்யும்.
சொல்வேந்தர் இன்னாட்டில் தேவை.
சோதி நிலையில் நின்றொளிரும்.
செயலில் நல்ல மனிதம் வாழும்.
தலமையென்பது தலையாய கடமை.
தரத்தின் மதிப்பு பெறுமதியானது.
தன்னொளி வீசும் கதிரவன் போன்று.
தனித்துவமாய் நடப்பதில் மனிதம் வாழும்.
– கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி.