சசிச
தலைப்பு
இற்றை வரைக்கும் புதியதோர் தலைப்பு
அற்புதமாய் தொடருது கவிஞர்கள் உழைப்பு
உற்பத்தி செய்வதில் நானாநீயா போட்டி
சற்றும் எதிர்பாராத திறமைகளைக் காட்டி
வற்றிவிடவில்லை பாவலர் படைத்திடும் பாக்கள்
அற்ப வாழ்வற்ற அதிசயப் பூக்கள்
கற்பனையோ பட்டவையோ செவ்வாயின் மாலை
கற்றவர்கள் அறிவினால் நிரம்பிடும் வேளை
கொடுத்துவிட தலைப்பை செவ்வாய் அன்றே
அடுத்த நொடி படைத்திடுவார் நன்றே
எப்படியென வியந்துமே கேட்போர் பலர்
இப்படியாகப் படைத்துமே புகழடைந்தார் சிலர்
கருத்தரித்தது பிரசவமானது இதன் கீழ்
உருவாக்கி பெருமை கொண்டது வெற்றுத்தாள்
அப்பாடா வார்த்தைகளை அடுக்கியொரு விளையாட்டு
முப்பொழுதும் தப்பிடாது தமிழின் தாலாட்டு
ஜெயம்
16-09-2023