சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:233
12/09/2023 செவ்வாய்

“மலைப்பு”
—————-
மூக்கால் ஒழுகிடும் கோலம்,
முகமே கழுவாத பாவம்!
சாக்கால் மறைத்த அடுப்படி,
சமமாய் நிமிர்ந்த தெப்படி!

கொம்புத்தேன் எடுத்து தந்தவள்,
கோடீஸ்வரி யென ஆகிவிட்டாள்!
செம்பு பாத்திரம் தேய்த்தவள்,
செல்வ அதிபதி ஆகிவிட்டாள்!

வெட்டியே விறகு விற்றவள்,
வேண்டாம் வேலை என்கிறாள்!
மெட்டியும் போட்டுக் காட்டுறாள்!
மேனியை நகையால் மூடுறாள்!

திகைத்தேன் நானும் ஒருமுறை!
நினைத்தேன் எல்லாம் மறுமுறை!
கதைத்தேன் என்னுள் பலமுறை!
மலைத்தேன் இன்றும் இதுவரை!

இதற்கேன் இந்தத் திகைப்பு?
இதிலென்ன உண்டு உவர்ப்பு?
இதெல்லாம் அவரவர் உழைப்பு!
இதற்குமா வேண்டும் மலைப்பு!!

(யாவும் கற்பனை)

நன்றி
மதிமகன்