இயற்கை….
வற்றாத பொய்கையாய்
வளம் சேர்க்கும் அருவியாய்
குன்றாத எழிலில் குவலயமே அழகில்
கோர்த்தெடுக்கும் முத்தே
கொள்ளையழகின் சொத்தே
இல்லையெனில் வாழ்வு
எமக்கேது கூறு
இயற்கை வளம் கொடையே
இவ் வையகத்தின் மிகையே
உயிரினமும் உலகும் உனக்குள்ளே மிளிரும்
உயிர்மூச்சுக் காற்றாய்
ஒருநொடியும் நகரும்
எல்லையற்ற வளத்தின்
இருப்பிடமே இயற்கை
இல்லையெனில் இங்கு ஏதுமில்லை மிடுக்கு!
நன்றி மிக்க நன்றி அண்ணா.