வியாழன் கவிதை

விண்ணவன்

உன் உயிர் காக்க
என் உயிர் நீப்பேன்.

நான் உன்னுடைய
கண்களில் என்றும்
இருப்பேன் உன்
இமையாக,

இமைகள் எப்படி
தன்னை அற்ப்பணித்து
கண்களை
காக்கின்றதோ!

அது போல
நான் என்
இன் உயிரை
விடுத்தேனும்,

என்னவளாகிய
உன்னை
காப்பேன்
என் அழகே!

உனக்கென
வாழும் நான்
என்னுயிராகிய
உன் உயிர் காக்க,

என் இன் உயிர்
துறக்க நேர்ந்தாலும்
அது எனக்கு
இன்பமே!

விண்ணவன் – குமுழமுனை.