சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சனி கலைச்செல்வன்

மணி—ச.ச.சி 226
மணியாரம் பூணும் மரபு ஆதிமுதல்
அணியாகி அழகினையே கூட்டும்
முனிகள் ரிஷிகள் முதலாக அரசர்
அணிதல் ஆதி முதல் வழக்கம்.
பணி எதையும் மணியாக பண்ணும்
மணிக் கரங்கள் பரம்பரையாய்
சிற்பம்,சித்திரம் ஆச்சாரியார்கள்
கூத்து,கரகாட்டம் அண்ணாவிமார்கள்
காலம் காலமாக கலைகளை
காக்கும் மணிக்கரங்கள்.
கோயில் மணியை வடிப்பதும்
குடும்ப வழி வந்த கலையே
சாதி வண்ணம் நவீன இயந்திரம்
சாதிக்க வந்ததால் காலாகாலம்
கலை காத்த கரங்கள்
பணம் பண்ண
திசைமாறிப்போயின.
என்ன செய்ய
கரங்கள் உரமாக
இயங்க
பலம் வேண்டுமே
பணம் வேண்டுமே
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-