வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1826!

பா இதழ்!

பா இதழ் வெளியாக்கம்
படைத்த மனங்களில்
பரவசக் கொண்டாட்டம்
பூ இதழ் வரித்த
புத்தம் புதுக்கதைகளின்
கோர்வையாய் விரிந்த
இணையப் பக்கங்களில்
அழகியல் ஆர்ப்பாட்டம்!

புத்துலகில் பூத்தஇதழ்
புதுமைகள் படைத்து
நின்ற பேரிதழ்
பத்தும் பத்தாகித
பல் விதமாய்ப்
புனைந்த சிறு கதை
இது பெரும் விதை!!

விரிந்தெழுந்த பக்கங்கள்
சொரிந்த அரிய கதைக்
காவியங்கள்
ஆற்றல்களின் வெளிப்பாடு
கூப்பாடில்லாக் குழந்தைக் கரங்களின் வழிபாடு!!
சிவதர்சனி இராகவன்
14/6/2023