வியாழன் கவி 1799!
நாட்டு நடப்பு!
வீட்டு வாடகை
உயர்வோ துயரு
விழுந்தடித்து வேலை
செய்தும் தொலைந்து
போகுதே இருப்பு!
இருப்பதைப் பகிர
இல்லையே மனது
இங்கே நாட்டுக்கு
நாடு இதுவே பிழைப்பு!
பொருளின் விலை
மலையென ஏற
மிச்சப் பிடிப்பில்
எஞ்சியது ஏதுமில்லை!
கடுகதி உணவும்
கரையும் காலமும்
தொலைவில் உறவும்
தொடர்கதை ஆனது!
சிவதர்சனி இராகவன்