அழகானாய் 566
தண்ணீருக்குள்ளே வாழ்வென்ற நினைப்பு
தட்பவெப்பமும் அமைந்திட்ட சிறப்பு
குவாக் குவாகென நீருக்குள்ளே பறப்பு
குளித்துவிட்டு சன்பாத்தும் எடுப்பு
தாம்பத்தியம் தெரியாத இருப்பு
தாதிகளே இல்லாத பிறப்பு
தரணியிலே பிறந்திட்ட சிறப்பு
தாரகைபோல் அழகினிலே ஜொலிப்பு
சகதி நீருக்குள்ளும் அழகான மிதப்பு
சடுதியாக குஞ்சுகள் அதிகாலை பொரிப்பு
சமையலுக்காய் பலராலும் பிடிப்பு
சுவைக்கு நல்லதென்ற கணிப்பு
விடுமுறை வந்தால் சிறுவர்களின் ரசிப்பு
விளையாட்டாய் உணவுகள் கொடுப்பு
வீதியோரங்கள் தாண்டி தடைமறிப்பு
வீசா இல்லா பயணம் பிரமிப்பே