வந்திடும் மகிழ்வு
மாதத்தின் பன்னிரண்டில்
மார்கழி ஓன்றானாய்
மானிடரின் மனதுக்குள்
மகிழ்வின் வரவானாய்
விடியலின் அழகெல்லாம்
வெண்பனி தூறலாய்
வெள்ளை ஆடைபோர்தியே
வெளிச்சமாய் இருந்திடுவாய்
நத்தார் விடுமுறையும்
சிறுவர்களின் ஆரவாரமும்
பனிப்பொம்மை பந்துஎன
விளையாடி மகிழ்ந்திடுவர்
இல்லமும் உள்ளமும்
இரட்டிப்பு மகிழ்வுற
இறையருளும் கூடியே
இருந்திடனும் எந்நாளுமே