உயிர்நேயம்
உயிரின் நேயம்
வலுவின் வாசம்
நிலத்தின் வாழ்வை
நிறுத்திடும் நேசம்
அறிவின் செதுக்கலில்
ஆழத்தின் பதியம்
அன்புடை நெஞ்சதில்
மிஞ்சிடும் வதனம்
காக்க வேண்டியது
உயிர் நேயம்
காத்து உதவுவது
அறிவுடை நெஞ்சு
உலகின் வறுமை
ஒழிப்பது கடனே!
உணவின் தேடல்
உறுதுணை ஆக்கும்
உதவும் கரங்கள்
உறுதுணையாகும்
உலகில் இதுவே
பெருந்துணையாகும்
நகுலா சிவநாதன் 1702