சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.12.2022
கவிதை இலக்கம்-203
மார்கழி
——————–
கார் எனும் காலம் தோன்றும்
பார் மரம் செடி கொடிகளெல்லாம்
பேர் தரு மலர்கள் அனைத்தும்
உதிர் கொண்ட மலர்களாய் போகும்
மார்கழி மலராம் இயேசு பாலன்
அதிசய மன்னராய் பிறந்தாரென்று
விண்ணது வானில் நட்சத்திரம் ஒளிர்ந்து
உலகறிய மானிடர் அறிய வைக்கும்
மகத்தான மார்கழி மகிழ்வாக வரவேற்க
தெரு கடை,வீடுகள் மின் விளக்குகளாக
பற்பல நிறங்களில் கண் சிமிட்டும்
சன நெருக்கடியில் கடைகள் நிரம்பும்
கன பரிசுப் பொருட்கள் வீடுகள் நிறையும்
இளையோர் பெரியோர் பரிசுக்கு காத்திருப்பர்
கிறிஸ்மஸ் கேக் பலகாரம் பரிமாற்றமாகும்
அலை மோதும் கடலும் தாண்டவம் ஆடும்
மலை போல உயர்ந்து கூத்தாடி உயரும்
சுனாமியாய் அள்ளி கொண்டும் செல்லும்
உறவுகளின் பிரிவும் துக்கமும் அழு ஓசையும்
ஒவ்வொரு வருட மார்கழியில் வந்து போகும்