வியாழன் கவிதை

Vajeetha Mohamed

கேளு மச்சி நம்ம நாட்டுநடப்ப

வேலையும்தொல்ல மச்சி
வ௫மானம் இல்ல மச்சி
ஊரெல்லாம் ௨றங்கிப்போய்
கிடக்கு மச்சி
சுற்றிவர விலையெல்லாம் பவுன்
கணக்குமச்சி

நாட்ட தாண்டிப் போக
வழியுமில்ல மச்சி
நாட்டில வாழ முடியவில்ல மச்சி
குட்டிச்சாக்கில காசுகொண்டுபோய்
சொப்பின் பேக்கில சாமான்வாங்கி
வாரோம் மச்சி

பெட்டியான் யப்பான் செத்தல்மீன்
பவுசுகாட்டுது ஊ௫க்குள்ள
கொட்டபாக்கு முட்டைக்கு
ஆறுபது ரூபாகண்கெட்டவில
சொல்லுறான் கேளுமச்சி

மூன்று நான்கு புள்ளவுள்ள
ஊட்டுள்ள
முழுப்பட்டனி கிடக்குது
தினம் விடியல்ல

கேளுமச்சி கேளுமச்சி
என்ன செய்தோம்
இந்தத் தீவில
கூறுபோட்டு நாட்டவித்தான்
பலவடிவில

இந்தகோண மூக்குகாரனிடம்
கடனும் பட்டான் மச்சி
பட்டியோடு பதவியேற்ற
பகட்டு இங்க பளிச்சிடுது
கேளுமச்சி

இரவோடு இரவாக ஓடியதெல்லாம்
பகலோடு பகலாய் வந்திட்டுமச்சி
வாக்குபோடாம பதிவேற்று
நாட்ட ஆழுது குள்ளநரியென்று மச்சி

நன்றி