வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 632

நட்பாக வாழ்க்கை

காலம் என்பின்னால் வருகின்றது
நாளும் நினைத்ததை தருகின்றது
வாழும் வாழ்க்கையும் சுவைக்கின்றது
நீளும் உறவுகளாய் அமைகின்றது

அழகான நினைவுகளாய் உள்ளத்தில்
பொழுதைப்போக்கவரும் சுகங்களெல்லாம் இல்லத்தில்
வழுக்கியே விழவில்லை பள்ளத்தில்
அளவில்லா ஆனந்த வெள்ளத்தில்

பாதைகள்  புதிதாகக் கிடக்கின்றன
பாதங்கள் பயணித்தே கடக்கின்றன
சாதகமாகவே விஷயங்கள் கிடைக்கின்றன
சாதிக்கச்சொல்லி வாய்ப்பினைப் படைக்கின்றன

சிரிப்பு ஒன்றே போதும்
சிறுசிறு சந்தோஷங்கள் ஊறும்
விரும்பியே அனுபவிக்கின்ற வாழ்க்கை
இருப்பிற்குள் நிம்மதி சூழ்கை

கடினம் என்பதும் இலகுவாக
படித்த அனுபவங்கள் பழக்கமாக
புரிந்து கொள்ளக்கொள்ள நன்மையே
பிடிக்கும் வாழ்வாகும் உண்மையே

சூழ்நிலை மாறும் மாறாது
வாழ்நிலை சோகத்தைக் கூறாது
நாளுக்குள் நம்பிக்கை குலையாது
தோல்விகள் நிழலுக்கும் நிகழாது

ஜெயம்
30-11-2022