சந்தம் சிந்தும் கவி 202 .
நினைவு நாள்.
மறந்திடுமா நெஞ்சம்
கார்த்திகை வந்திட்டால் ஆசை முகம் நிலாடுதே.
ஆண்டுகள் 33 கழிந்தாலும்
கண்ணுக்குள்
கலையாத நினைவுகள்.
உந்தன்
ஆசை முகம் தெரியுதே
கண்கள் தேடுதே. கட்டி அனைக்க
கைபிடித்து நடக்க மனம் ஏங்குதே.
மறக்க மனம்
மறுக்கிறது நெஞ்சம் வலிக்குதே
கனவில் வந்து கனிவாய் பேசி கருணை முகம் காட்டி
கண்விழிக்க கலைகிறதே..,….
மறையாமல் நீ ஆற்றிய பணிகள் இன்னும் நிலைத்து
தொடர்கிறது……
நினைவு நாளில்
நினைவால்
அமுது அளித்தே
அன்னையர்க்கு ஆனந்தம் கொள்வேனே……
உன் நினைவால்…….
அதிபருக்கும் பாவை அண்ணா விற்கும் நன்றி.
நகுலவதி தில்லைதேவன்.