வியாழன் கவி 1727!
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்!
நிழல்போல நினைவுகள் தொடரினும்
இவர் நம் முன்னே
வாழ்ந்த தடயங்கள்
எமைக் கரைய வைக்கிறது!!
வாழும் வயதில்
வல்லமை தாங்கியெழுந்தவர்
வாழ்ந்த மண்மீட்க
உயிரைத் தானமாய்த் தந்தவர்!!
சிலர் சிலரை
மறந்தாலும்
பலர் பலமாய் நினைவிருத்தும்
பெரும் புனிதங்கள் இவர்கள்!!
மனிதம் வாழத் தலை
சாய்த்து வீழ்ந்தார்
விழுந்தாலும் வீரியமாய்
எழுவோம் என உரைத்து
உலகம் வியக்கும்
இவர் செயல்!!
கார்த்திகையில் இவருக்காய்த் தலை
சாய்த்து நிற்கிறோம்
நீதி சாயாது எனவுரைத்து!!
சிவதர்சனி இராகவன்
24/11/2022