வகுப்பறை ஆளுமை 540
அகரத்தை மெல்லெனவே எழுதவைத்து
அன்பாய் பாசமாய் பரிவாய் அணைத்து
மண்ணிலும் சிலேட்டுமாய் கிறுக்கவைத்து
சிகரமாய் ஏற்றிவிட்ட பெருந்தகைகள்
பள்ளிகளில் பலவாய் இருப்பதும்
படிப்பு என்பதால் அறைமாறுவதும்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து பறப்பதும்
நடிப்பும் கற்றலாய் ஆளுமையாகும்
சுண்ணாம்புக்கட்டி கரும்பலகையில் ஓவியமாய்
சுற்றம்சூழ்ந்து நண்பர்களாய் கூட்டம்
சுதந்திரமாய் வகுப்பறையில் நாட்டம்
சுபீட்சமாய் கல்வியிலும் ஆளுமையாய்
ஏற்றிவைத்த பல ஆசிரியர் எனக்குள்ளே
ஏற்றத் தாழ்வின்றி உயர்த்திய ஆசானாய்
எப்போதும் தெரியாததை அறியமுயலும்போதும்
ஏகமனதாய் விளக்கம் தந்தவர் ஏராளம்
தாராளமாய் ஆசிரியர் தினத்தில்
மதித்து தலைவணங்கி நிற்கின்றேனே