வியாழன் கவிதை

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-29.09.2022
கவி இலக்கம்-1982
தியாக தீபங்கள்
————————-
தியாக தீப லெவ் கேணல் திலீபன்
35 ம் ஆண்டின் நினைவேந்தலில்
26.09.22 ல் நினைவு கூருவோம்
உண்ணா நிலையில் உன்னத திலீபன்
ஈராறு நாட்கள் உயிரை திரியாக்கி
இலட்சிய பாதையை உணவாக்கி
அணைந்து போனது உயிரே
இந்திய இராணுவத்தின் கெடு பிடிக்கி
பொல்லாத சதியில் அணைந்த தீபமாகி
எம் மண்ணுக்காய் உயிர் நீத்தவரே
எம் இன ம்களின் கனவுகளை
மனங்களில் சுமந்து வந்தவரே
சின்ன வயதில் மண்ணை பிரிந்து
நிச்சயம் பலிக்குமே அவரின் கனவுகள்
காலத்தால் அழியாத காவியத்திற்கு
உலக நாடுகளில் நினைவு வணக்கமே